×

குஜராத் கலவர வழக்கு பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: குஜராத் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவித்ததை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் தண்டனை காலம் முடியும் முன்னே கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. குற்றவாளிகள் 11 பேரும் ஆயுள் தண்டனை முடியும் முன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு சுப்ரீம் கோர்ட்டில் மனு சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 11 குற்றவாளிகள் விடுதலை செய்வது குறித்து குஜராத் மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி பெலா திரிவேதி விலகியதால் அமைக்கப்பட்ட புதிய அமர்வு இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்தது….

The post குஜராத் கலவர வழக்கு பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Bilkis Banu ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது குஜராத் அணி